மானாமதுரையில் வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் முதுகுளத்தூர் கோர்ட்டில் சரண்

 


சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதுத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் அவரது மகன் அருள்நாதன் என்கிற மைனர் மணி வயது 29 இவரது நண்பர் வினோத் கண்ணன் இவர் மானாமதுரை உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்கள் இருவரும் கடந்த 9ஆம் தேதி மானாமதுரை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முன்பு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் முன்விரோதம் காரணமாக இரண்டு பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர் அதில் மைனர் மணி பரிதாபமாக உயிரிழந்தார் வினோத் கண்ணன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் மானாமதுரை போலீஸ்4பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

ராமநாதபுரத்தில் உள்ள சிறையில் அடைப்பு. இந்நிலையில் வழக்கு தொடர்பாக மதுரை காமராஜ் புரத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் மிதுன் மாணிக்கம் வயது 21 மானாமதுரை தெற்கு ரத வீதியை சேர்ந்த தேசிகன் மகன் வசந்த் சரண் வயது 22 மருதுபாண்டி தெருவைச் சேர்ந்த முனியாண்டி மகன் ராஜ்குமார்வயது 22 மானாமதுரை செக்கடி தெருவைச் சேர்ந்த பூமிநாதன் மகன் சங்கர் வயது 19 ஆகிய 4 பேரும் முதுகுளத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர் அவர்கள் 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார் இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்

Comments